Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Sunday, April 12, 2020

JavaScript-ல் String என்றால் என்ன?அது எப்படி பயன்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.


JavaScript String என்றால் என்ன?


ஒன்றுக்கு மேற்பட்ட character சேர்ந்து உருவாகுவதுதான் String ஆகும்.
இது ஒரு immutable ஆகும்.Immutable என்பது change பண்ண முடியாது என்று அர்த்தம் ஆகும்.
String-யை இரண்டு விதமாக உருவாக்க முடியும்.
1.String Literals
2.String Object

String Literal Syntax

var stringname="String Value";

Ex:
<script>
var program="javascript";
console.log(program);
<script/>

String Object Syntax

var StringName=new String("String_Value");

Ex:
<script>
var program_1=new String("javascript");
console.log(program_1);
<script/>

Notes:
String Object-யை பயன்படுத்தி String Create பண்ணினாள் உங்களுடைய Execution வேகத்தை குறைக்கும்.

double quotes-ல் தான் string value கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை.நீங்கள் single quotes-ல் கொடுக்கலாம் அல்லது back ticks மூலமாகவும் string value கொடுக்க முடியும்.
Double Quotes
<script>
var name="raj";
var area="T.V.S nagar";
document.write("my name is"+name+".My area name is"+area+".");


//double quotes பயன்படுத்தும்போது + என்ற குறியீட்டை variable_nameமுன்பு கொடுக்க வேண்டும்.
<script/>
BackTick Key
<script>
var name="raj";
var area="T.V.S nagar";
document.write(`my name is ${name}.My area name is ${area}.`);


//backtick key பயன்படுத்தும்போது +{} என்ற குறியீட்டின் உள்ளே variable_name கொடுக்க வேண்டும்.
<script/>
Notes:
== என்பது variable-ல் கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மட்டும் check பண்ணும்.

=== என்பது variable-ன் type மற்றும் variable-ல் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு ஆகிய இரண்டையும் check செய்யும்.

<script>
var first="javascript";
var second=new String("javascript");

if(first==second) {
document.write("equal
");
}
else
{
document.write("not equal");
}
<script/>
<script>
var str1="javascript";
var str2=new String("javascript");

if(str1===str2) {
document.write("equal");
}
else
{
document.write("not equal");
}
<script/>
<script>
var str3=new String("javascript");
var str4=new String("javascript");

if(str3==str4)
{
document.write("equal");
}
else
{
document.write("not equal");
}
<script/>
Explain:
str3 மற்றும் str4 இந்த இரண்டும் object type ஆகும்.இந்த இரண்டிலும் javascript என்ற மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
(str3==str4)இந்த condition check செய்யப்படுகிறது.condition false என்பதால் else part-இல் இருக்கும் not equal என்ற statement execute ஆகிறது.
காரணம்,இந்த இரண்டும் வெவ்வேறான object ஆகும்.

<script>
var str5=new String("javascript");
var str6=new String("javascript");

if(str5===str6)
{
document.write("equal");
}
else
{
document.write("not equal
");
}
<script/>
Explain:
str5 மற்றும் str6 இந்த இரண்டும் object type மற்றும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது.இருப்பினும் ஏன் not equal வருகிறது என்றால் இந்த இரண்டும் different object ஆகும்.


Double Quotes

ஒரு statement-இல் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் double quotes உள்ளே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு \" என்று கொடுக்க வேண்டும்.
<script>
document.write("I Love \"JavaScript\");
<script/>
ஒரு statement-இல் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் single quotes உள்ளே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு \' என்று கொடுக்க வேண்டும்.

Single Quotes

<script>
document.write("It\'s mine.");
<script/>
ஒரு statement-இல் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் backslash உள்ளே கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு \\ என்று கொடுக்க வேண்டும்.

Backslash Symbol

<script>
document.write("It is\\backslash character.");
<script/>

No comments:

Post a Comment