modules என்பது group of components,directives,pipes மற்றும் services ஆகியவற்றை NGModule மூலமாக இணைப்பது ஆகும்.
Ex:
app.modules.ts என்பது Root module ஆகும்.
NGModules Key
declarations:
எனக்கு எந்தெந்த components தேவைப்படுகிறதோ அவற்றை எல்லாம் இங்கே கொடுக்க வேண்டும்.components மட்டும் இல்லாமல் directives,pipes போன்றவற்றை கொடுக்க முடியும்.
Imports:
எனக்கு எந்தெந்த modules தேவை என்பதை இங்கே கொடுக்க வேண்டும்.
ex:
login form-க்கு உருவாக்க form modules தேவை.அதனால் form modules-யை இங்கே கொடுக்க வேண்டும்.
exports:
எந்தெந்த components-யை வேறு யாராவது பயன்படுத்த வேண்டுமென்றால் அதனை export-ல் கொடுக்க வேண்டும்.
bootstrap:
மேலே 10 components கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றில் முதலில் எந்த components இருந்து தொடங்க வேண்டும் என்பதை இங்கே கொடுக்க வேண்டும்.
Providers:
நீங்கள் எதாவது service பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை providers-ல் கொடுக்க வேண்டும்.
Ex:
login form-க்கு நீங்கள் otp service பயன்படுத்தி இருக்கீர்கள் என்றால் அந்த otp services-யை provider-ல் கொடுக்க வேண்டும்.
Small Example
declaration:[AppComponent]->இங்கே AppComponent என்ற ஒரே ஒரு component மட்டும் இருப்பதால் declaration-இல் AppComponent மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
imports:[BrowserModule,AppRoutingModule]
என்னுடைய application-யை web browser-ல் காண்பிக்க விரும்பினால் அதற்கு browser module-யை பயன்படுத்த வேண்டும்.
AppRoutingModule என்பது ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு செல்ல உதவுகிறது.
providers:[]->நான் எந்த service-யையும் பயன்படுத்தவில்லை அதனால் empty-ஆக இருக்கிறது.
bootstrap:[AppComponent]->எந்த component-இல் இருந்து தொடங்க வேண்டும் என்பதை இங்கே கொடுக்க வேண்டும்.இங்கே AppComponent கொடுக்கப்பட்டுள்ளதால் AppComponent-இல் இருந்து தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment