Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Wednesday, August 26, 2020

[Tamil] React JS Introduction

React JS என்பது ஒரு JavaScript library ஆகும்.இதனை நாம் User Interface-க்கு பயன்படுத்துகின்றோம்.
MVC architecture-ல் view பகுதிக்கு மட்டும் நாம் ReactJS-யை பயன்படுத்துகின்றோம்.

இது ஒரு open source ஆகும்.ReactJS-யை கண்டுபிடித்தவரின் பெயர் Jordan Walke ஆகும்.இதனை Facebook-தான் develop செய்து கொண்டிருக்கிறது.

React js ஒரு Single Page Application(SPA) ஆகும். Single Page Application என்பது ஒரு website-யை எடுத்துக் கொண்டால் அதில் Header,Footer,Navbar இவைகள் அனைத்தும் webpage-க்கும் தேவைப்படும் மற்றும் இவைகளில் எந்தவொரு மாற்றமும் தேவைப்படாது.ஆனால் இதற்கு நடுவில் உள்ள content பகுதியானது ஒவ்வொரு webpage க்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும்.

இந்த Single Page Application-ஆல் நமக்கு நேரமும், Memory-யும் சேமித்துக்கொள்ள முடிகிறது.

Virtual Dom என்பது நமக்கு எந்த object-யை மட்டும் மாற்ற வேண்டுமோ அந்த குறிப்பிட்ட object-யை மட்டும் மாற்றம் செய்யும்.அனைத்து object-யையும் மாற்றம் செய்யாது.
Virtual Dom ஆனது Real Dom-யை விட வேகமாக செயல்படும்.

Advantage:
ஒருமுறை ஒரு Component உருவாக்கிவிட்டால் மறுபடியும் அந்த component உருவாக்க அவசியமில்லை.உங்களுக்கு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த component-யை பயன்படுத்த முடியும்.அதனால் இதனை Reusable component என்று அழைக்கிறார்கள்.

JSX Code-யை பயன்படுத்திதான் React Js application-யை உருவாக்க முடியும்.JSX என்பது HTML மற்றும் JAVASCRIPT சேர்ந்து உருவாக்கியது ஆகும்.

React JS-யை பயன்படுத்தி web application மற்றும் native application உருவாக்க முடியும்.native application என்பது IOS,ANDROID போன்றவைகளை React native பயன்படுத்தி உருவாக்க முடியும்.

Disadvantage:
நீங்கள் additional features பயன்படுத்த விரும்பினால் External Library-யை உங்கள் project-ல் பயன்படுத்த வேண்டும்.
Eg:-
React Router


மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள கீழே இருக்கின்ற வீடியோவை பார்க்கவும்...

No comments:

Post a Comment