Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Wednesday, July 8, 2020

Array Using C In Tamil




array-ல் ஒரே விதமான data type-யை மட்டும் store செய்ய முடியும்.அதனால் இதனை homogeneous data type என்று ஆழைக்கப்படுகிறது.
நாம் 7 numbers வாங்க வேண்டுமென்றால்,
int num1,num2,num3,num4,num5,num6,num7; என்று கொடுப்போம்.
இதுவே array-ல் எப்படி கொடுக்கப்படும் என்றால்,
int num[7];

7 integer மதிப்பை இந்த num என்கிற variable-க்கு உள்ளே சேமிக்க முடியும்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்,7 தனி தனி variable உருவாக்குவதற்கு பதிலாக.ஒரு array variable-யை உருவாக்கி அதனுள் இந்த variable-ன் memory-யை நம்மால் பயன்படுத்த முடியும்.
இந்த 7 element-ம் வரிசையாக memory-ல் store செய்யப்பட்டிருக்கும்.
இந்த array element-யை நாம் index-யை வைத்து தான் access பண்ண முடியும்.
index மதிப்பானது 0-வில் இருந்து தான் ஆரம்பிக்கப்படும்.

Declaring Array

Syntax
data_type array_name[size];

data_type -> int,float,char...இது போன்ற data type-களை குறிக்கின்றது.
array_name -> இது ஒரு variable name-யை குறிக்கின்றது.
size -> இது ஒரு integer மதிப்பாக இருக்க வேண்டும்.


Initializing Array

Method 1:
int arr[5]={10,20,30,40,50};
arr[5] என்ற variable ஆனது முதலில் 5 இடங்களை உருவாக்கி அதனுள் கொடுக்கப்பட்ட மதிப்புகளை சேமிக்கிறது.

Method 2:
int arr[10]={10,20,30};

முதலில் arr[10] என்ற variable ஆனது முதலில் 10 இடங்களை உருவாக்குகின்றது.அதில் மூன்று இடத்தில மதிப்பை store செய்க்கின்றது மற்ற இடங்களில் zero-வை கொடுக்கின்றது.

Method 3:
int arr[2]={10,20,30,40,50};
arr[2]- ல் இடங்களை மட்டும் உருவாக்க முடியும்.ஆனால்,இங்கு 5 மதிப்புகள் இருகின்றது.இந்த மாதிரி நிகழ்ந்தால் computer ஆனது நமக்கு ஒரு warning message-யை தெரிவிக்கும்.இதிலிருந்து தெரிவது என்னவென்றால் array-ன் size-யை விட அதில் கொடுக்கபடும் மதிப்பானது அதிகமாக இருக்கக்கூடாது.

Method 4:
int arr[]={10,20,30};
இவ்வாறு நாம் size கொடுக்காமல் array-யை initialize செய்யப்படுவதால் compiler ஆனது கொடுக்கப்பட்டுள்ள மதிப்புக்கு ஏற்றவாறு memory-யை எடுத்து கொள்ளும்.


மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை பாருங்கள்.அதில் 1000,1004,1008 என்று memory ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.காரணம்,integer data type ஆனது ஒரு value-வை சேமித்து வைப்பதற்கு 4 bytes எடுத்துக் கொள்ளும்.
முதலில் இருக்கின்ற integer மதிப்பானது 1000-இல் இருந்து 1003-வரை எடுத்துக் கொள்ளும்.அடுத்த மதிப்பானது 1004-இல் இருந்து 1007-வரை எடுத்துக் கொள்கிறது.அடுத்த மதிப்பானது 1008-இல் இருந்து 1011-வரை எடுத்துக் கொள்கிறது.
இப்படி தான் Array-ல் அணைத்து element-க்கும் memory-ஆனது ஒதுக்கப்படுகிறது.

இப்பொழுது User இடமிருந்து எப்படி array-யை பயன்படுத்தி value வாங்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

Array-ல் value-வை சேமிப்பதற்கு,
num என்கிற array variable-ல் 5 integer மதிப்புகளை சேமிக்க முடியும்.
int num[5];
for(i=0;i<5;i++)
{
scanf("%d",&num[i]);
}

Array-ல் உள்ள value-வை display செய்வதற்கு,
num என்கிற array variable-ல் இருக்கின்ற 5 integer மதிப்புகளை display செய்ய முடியும்.
int num[5];
for(i=0;i<5;i++)
{
printf("%d",num[i]);
}

Sample Program:
#include<stdio.h>
int main()
{
int num[5]; printf("Enter the 5 values:");
for(i=0;i<5;i++)
{
scanf("%d",&num[i]);
}
printf("Display Values");
for(i=0;i<5;i++)
{
printf("%d",num[i]);
}
return 0;
}


Output:
Enter the 5 values:
10
20
30
40
50

Display Values:
10
20
30
40
50

No comments:

Post a Comment