Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Friday, May 1, 2020

Variable Using C In Tamil



Variable



Variable என்பது memory-க்கு கொடுக்கப்படும் பெயர் ஆகும்.இந்த variable-யை பயன்படுத்தி நம்மால் program-யை மிக எளிமையாக எழுத முடிகின்றது.

variable name-யை கொடுப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

i) variable தொடங்கும்போது முதல் எழுத்து small alphabet letters[a-z]-ஆக இருக்க வேண்டும்(அல்லது)capital letters[A-Z]-ஆக இருக்க வேண்டும்.


ii) underscore-யை தவிர வேறு எந்த ஒரு special character-ம் variable name-ல் கொடுக்க கூடாது.


iii) variable name ஒரு case sensitive ஆகும்.
Eg:
நீங்கள் salary ஏன்ற variable-யை program-இல் கொடுத்து இருக்குறீர்கள்.இந்த salary என்கின்ற வார்த்தையில் உள்ள அணைத்து எழுத்துக்களும் small letters ஆகும்.
நீங்கள் இந்த variable-யை வேறொரு இடத்தில் பயன்படுத்தும் போது Salary என்று கொடுக்க கூடாது .ஏனென்றால்,இங்கு S என்பது CAPITAL letter ஆகும்.
நீங்கள் மேல கொடுத்த salary என்ற variable,கிழ கொடுக்கப்பட்ட Salary என்ற variable-ம் வேறுபட்டவை ஆகும் .
அதனால் நீங்கள் ஒரு variable-யை எப்படி கொடுக்கிறீர்களோ,அதே போல்தான் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.இதை தான் case sensitive என்று சொல்கிறோம்.

iv)எழுத்துக்கள் மற்றும் எண்களை சேர்த்து ஒரு variable name கொடுக்கலாம்.ஆனால் முதல் எழுத்து எப்பொழுதும் எண்களாக இருக்க கூடாது.
Eg:
age1,age2

v)C program keyword-யை ஒருபோதும் variable name-ஆக பயன்படுத்தக்கூடாது.
Eg:
int,goto,while.


Constant in C

ஒரு variable-க்கு கொடுக்கப்படும் மதிப்பு மாறாமல் இருக்குமானால் அதுவே constant ஆகும்.

const என்ற keyword-யை பயன்படுத்தி எந்தொரு data type-யையும் நாம் constant-ஆக declare பண்ண முடியும்.

Syntax:


const data_type variable_name = value;

const int i=10;

const char x=’g’;

இந்த const என்ற keyword-யை பயன்படுத்தி variable கொடுக்கப்படும் மதிப்பை program-ல் மாற்ற முடியாது.


இது தான் variable மற்றும் constant-க்கு உள்ள வேறுபாடு ஆகும்.

No comments:

Post a Comment