Data types
C progam-ல் ஒரு data-வை memory-யில் சேமிப்பதற்கும்(Store),அந்த data-வை உபயோகப்படுத்துவதற்கும்(Use) முன்பாக அதனுடைய data type-யை நாம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
Integer Data type:
இது ஒரு integer data type ஆகும்.இது ஒரு முழு எண்ணை store செய்வதற்கு பயன்படுகின்றன.இதனுடைய அளவு 4 bytes ஆகும்.
program-ல் நாம் ஒரு integer data type-யை பயன்படுத்தினால் memory-ல் 4 bytes எடுத்து கொள்ளும்.
Eg:
0,1,4,5,-3,-2 இது போன்ற முழு எண்களை மட்டும் கொடுக்க முடியும்.Float data type:
இதை பயன்படுத்தி புள்ளி(.)வைத்த எண்களை மட்டும் memory-யில் சேமிக்க முடியும்.இதுவும் ஒரு மதிப்பை memory-யில் செய்வதற்கு 4 bytes எடுத்துக் கொள்ளும்.
Eg:
1.5,3.67,4.55,.4.77இது போன்ற புள்ளி (fractional number) வைத்த எண்களை கொடுக்க வேண்டும்.
Double data type:
இதுவும் புள்ளி வைத்த எண்களை மட்டும் memory-ல் சேமிக்க முடியும்.இது memory-யில் 8 bytes எடுத்து கொள்ளும்.
Eg:
1784.5786,-4758.6788474.Void data type:
இது ஒரு incomplete data type ஆகும்.இதனுடையை memory அளவு 1 bytes ஆகும்.
Eg:
void display()display() என்ற function தன்னுடைய வேலைகளை முடித்த பிறகு call செய்யப்பட்ட function-க்கு எந்த ஒரு மதிப்பையும் திரும்ப அனுப்பாது.
char data type:
இதனுள் ஒரு எழுத்தினை (character )மட்டும் store பண்ண முடியும் .நாம் கொடுக்கும் எழுத்தினை single quotes-ன் உள்ளே கொடுக்க வேண்டும்.இது ஒரு character-யை memory சேமிக்க 1 bytes எடுத்து கொள்கின்றது.
Eg:
‘a’,’c’,’g’,’#’இப்படி தான் character-யை நாம் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment