HTML FORMATTING
HTML formatting என்பது text-க்கு சிறந்த தோற்றத்தை கொடுக்கிறது.css-யை பயன்படுத்தாமல் text-யை வடிவமைக்க html உதவுகிறது.html-ல் பல வடிவமைப்பு குறிச்சொற்கள் உள்ளன.
<Bold text>:
<b>tag உள்ளே கொடுப்பதன் மூலம் text-யை தடித்து காண்ப்பிக்கப்படும்.
Bold Text
<!DOCTYPE>
<html>
<body>
<p> <b>வேற லெவல்.</b></p>
</body>
</html>
OUTPUT
<deleted text>:
நாம் எந்த word-யை delete பண்ண விரும்புகிறமோ அதனை இந்த tag உள்ளே கொடுக்க வேண்டும்.
Delete Text
<!DOCTYPE>
<html>
<body>
<p>Hi.. <del>இதனை அழிக்கவும்.</del></p>
</body>
</html>
OUTPUT
<emphasis text>:
குறிப்பிட்ட வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க emphasis tag பயன்படுத்தப்படுகிறது.
Emphasized Text
<!DOCTYPE html>
<html>
<head>
<title></title>
</head>
<body>
<p>என்னிடம் <em>பேனா</em> இருக்கிறது.</p>
</body>
</html>
OUTPUT
<Inserted Text>:
நீங்கள் புதிய வார்த்தையை சேர்க்க விரும்பினால் insert tag உள்ளே கொடுக்க வேண்டும்.
Insert Text
<!DOCTYPE>
<html>
<body>
<p> <del>இதனை அழிக்கவும்.</del><ins>இதனை இணைக்கவும்.</ins></p>
</body>
</html>
OUTPUT
<italic text>:
<i> tag என்பது italic text ஆகும்.இதனுள் கொடுக்கப்படும் text-யை சாய்த்து காண்ப்பிக்கும்.
Italic Text
<!DOCTYPE>
<html>
<body>
<p> <i>நான் மதுரைக்கு போகிறேன்.</i></p>
</body>
</html>
OUTPUT
<Larger Text>:
இந்த tag-ன் உள்ளே கொடுக்கப்படும் text ஆனது மற்ற எழுத்துக்களை விட ஒரு அளவு உயர்த்தி பெரிதாக காண்ப்பிக்கபடும்.
Largest Text
<!DOCTYPE>
<html>
<body>
<p>Hello <big>நான் மதுரைக்கு போகிறேன்.</big></p>
</body>
</html>
OUTPUT
<Marked Text>:
ஒரு text-யை முன்னிலைப்படுத்த விரும்பினால் இந்த tag பயன்படுத்தப்படுகிறது.
Mark Text
<!DOCTYPE>
<html>
<body>
<h2>எனக்கு<mark> விவசாயம்</mark> பிடிக்கும்.</h2>
</body>
</html>
OUTPUT
<Smaller Text>:
இந்த tag-ன் உள்ளே கொடுக்கப்படும் text ஆனது மற்ற எழுத்துக்களை விட ஒரு அளவு குறைத்து சிறியதாக காண்ப்பிக்க படும்.
Smaller Text
<!DOCTYPE>
<html>
<body>
<p>HI.. <small>என்னிடம் பணம் உள்ளது.</small></p>
</body>
</html>
OUTPUT
<Strike Text>:
இதனுள் கொடுக்கப்படும் வார்த்தைகளை அடித்து காட்ட பயன்படுகிறது.
Strike Text
<!DOCTYPE>
<html>
<body>
<p> <strike>என்னிடம் பணம் உள்ளது.</strike>.</p>
</body>
</html>
OUTPUT
<strong text>:
ஒரு வார்த்தையை அழுத்தமாக சொல்வதற்கு strong tag பயன்படுகிறது.
Strong Text
<!DOCTYPE html>
<html>
<head>
<title>formatting elements</title>
</head>
<body>
<p>எனக்கு <strong>விவசாயம் </strong>பிடிக்கும்.</p>
</body>
</html>
OUTPUT
<Subscript Text>:
இதனுள் கொடுக்கப்படும் text-யை மற்ற text-களிடம் இருந்து பாதி உயரம் கீழே இறக்கி காண்ப்பிக்கப்படும்.
Subscript Text
<!DOCTYPE>
<html>
<body>
<h3>Subscript Text</h3>
<p>H<sub>2</sub>O</p>
</body>
</html>
OUTPUT
<Superscript Text>:
இதனுள் கொடுக்கப்படும் text-யை மற்ற text-களிடம் இருந்து பாதி உயரம் மேலே வைத்து காண்ப்பிக்கப்படும்.இது பெரும்பாலும் Maths Formula-விற்கு பயன்படுத்தப்படும்.
Superscript Text
<!DOCTYPE>
<html>
<body>
<h3>Superscript Text</h3>
<p>(a+b)<sup>2</sup></p>
</body>
</html>
OUTPUT
<Underlined Text>:
text-யை அடிக்கோடிட்டு காட்ட பயன்படுகிறது.
<!DOCTYPE>
<html>
<body>
<p> <u>நான் சென்னைக்கு போகிறேன்.</u></p>
</body>
</html>
No comments:
Post a Comment