Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Friday, March 27, 2020

Javascript Variables In Tamil


variable என்பது நாம் கொடுக்கும் மதிப்பை memory-இல் சேமித்து வைக்க உதவுகிறது.
நீங்கள் ஒரு மதிப்பை பயன்படுத்த விரும்பினால் அந்த மதிப்பு சேமிக்கப்பட்ட variable-யை பயன்படுத்துவதன் மூலம் அந்த மதிப்பை உபயோகப்படுத்த முடியும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.
நான் இப்பொழுது 7 என்ற மதிப்பை(value) பயன்படுத்த விரும்பினால்,அந்த மதிப்பிற்கு கொடுக்கப்பட்ட x என்ற variable-யை பயன்படுத்தி தான் அந்த மதிப்பை உபயோகப்படுத்த முடியும்.

Identifiers:
javascript variable-யை identifiers என்று அழைப்பார்கள்.

variable-க்கு பயன்படுத்தப்படும் பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது.
variable-க்கு கொடுக்கப்படும் பெயர்கள் அனைத்தும் எழுத்துக்கள்,Underscore,dollar-இல் தான் தொடங்க வேண்டும்.
javascript keyword (Reserved Word)-யை variable பெயராக பயன்படுத்த முடியாது.
variable-லில் கொடுக்கப்படும் பெயர்கள் எண்களில்(numbers) தொடங்க கூடாது.
variable-லில் கொடுக்கப்படும் பெயர்கள் அனைத்தும் case sensitive ஆகும்.

variable பெயர் A என்று கொடுத்துவிட்டு a என்று கொடுக்கக் கூடாது.காரணம்,ஒன்று capital Letter(A) மற்றோன்று small letter(a) ஆகும்.நீங்கள் variable பெயரை capital letter கொடுத்தால் print செய்யும் பொழுது capital letter-இல் தான் கொடுக்க வேண்டும்.மாறாக,small letter-இல் கொடுக்க கூடாது.இதை தான் case sensitive என்று சொல்கிறோம்.
javascript-இல் variable உருவாக்க விரும்பினால் முதலில் var என்ற keyword கொடுக்க வேண்டும்.அதன் பிறகு தான் variable பெயர் கொடுக்க வேண்டும்.இப்படி தான் javascript-இல் ஒரு variable-யை உருவாக்க முடியும்.இதனை variable declaring என்று அழைப்பார்கள்.
ஒரு statement-இல் நிறைய variable கொடுக்க முடியும்.முதலில் var என்ற keyword உடன் தொடங்க வேண்டும்.அதன் பிறகு கொடுக்கப்படும் ஒவ்வொரு variable பெயருக்கும் இடையில் comma (,)கொடுத்து பிரித்து காட்ட வேண்டும்.
<script>

var x=2;

var y=3;

var z=x*y;

console.log(z);

</script>

Code Explains

x என்ற variable 2 என்ற மதிப்பையும்,y என்ற variable 3 என்ற மதிப்பையும் memory-இல் சேமித்து வைத்து இருக்கிறது.z என்ற variable 6 என்ற மதிப்பை memory-இல் சேமித்து வைக்கிறது.

No comments:

Post a Comment