Function என்பது ஒரு Block Of Code.ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய function பயன்படுகிறது.
நாம் Youtube-ல் ஒரு விடியோவை கிளிக் செய்யும் பொழுது அந்த விடியோவானது play ஆகும்.அந்த play என்ற வார்த்தைக்கு பின்னாடி ஒரு பெரிய வேலை இருக்கிறது. முதலில் அந்த விடியோவை கண்டுபிடித்து,அதனை read செய்த பிறகு அதனை நமக்கு play செய்ய வேண்டும்.இப்படி நிறைய வேலை இருக்கிறது.இதற்கு நிறைய statement தேவைப்படும்.இதற்கு நாம் play என்ற பெயர் கொடுத்துள்ளோம்.இந்த Statetment நாம் ஒவ்வொரு video-க்கு எழுத அவசியமில்லை.ஒரு தடவை எழுதி பெயர் கொடுத்தால் மட்டும் போதும் தேவைப்படும்போது தேவைப்படுகின்ற விடியோவை play செய்து பார்த்து கொள்ளலாம்.
Function பயன்படுத்துவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
1.Function Declaration
2.Function Calling
function declaration செய்து முடித்த பிறகு அதனை call செய்ய வேண்டும்.அப்பொழுது தான் function வேலை செய்யும்.இல்லையென்றால் நாம் எழுதிய function அதனுடைய வேலையை செய்யாது.
1. Code Reusability:
ஒரு தடவை function எழுதினால் போதும்.நீங்கள் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் அந்த function-யை பயன்படுத்தி கொள்ள முடியும்.
2. Less Coding:
உங்களுடைய program line-யை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.
Function Syntax:
Javascript function-ல் கண்டிப்பாக function என்ற keyword கொடுக்க வேண்டும்.முதலில் function keyword அதனை தொடர்ந்து function-க்கு உரிய name அதனை தொடர்ந்து parentheses() கொடுக்க வேண்டும்.
*Parenthesis-க்கு உள்ளே parameter கொடுப்போம்.ஒன்றுக்கு மேற்பட்ட parameter கொடுக்கும்போது அதனை பிரித்துக் காட்ட comma(,) பயன்டுத்தப்படுகிறது.
*Curly brackets உள்ளே கொடுக்கப்படும் code தான் execute ஆகும்.
1. functions
2. functions arguments
3. functions with return value.
முதலில் square என்ற function declare செய்யப்படுகிறது. இந்த function-ல் number என்ற arguments கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் function-யை call செய்யும் போது அதனுடன் சேர்த்து argument கொடுக்க வேண்டும்.
square(2); இங்கு 2 என்பது argument ஆகும்.
return keyword என்பது value-யை function declaration-ல் இருந்து function calling-க்கு அனுப்பும்.
function data() என்பது declaration ஆகும்.
இந்த function "I Love India" என்ற மதிப்பை return செய்கிறது.
இந்த மதிப்பானது function call செய்யப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறது.
var x = data();
data() என்பது function calling ஆகும்.இங்கு தான் return keyword அனுப்பிய மதிப்பு வரும்.அந்த மதிப்பானது variable x-ல் சேமிக்கப்படுகிறது.
arguments மற்றும் parameter-க்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால் function declaration-ல் கொடுப்பது parameters என்றும்,அந்த function-யை call பண்ணும்போது அதற்கு கொடுக்கப்படும் value arguments என்றும் சொல்லப்படுகிறது.
return keyword ஆனது function-ல் இருந்து ஒரு மதிப்பை return செய்கிறது.

Advantage of javascript functions:

Simple Functions
<script>
function info()
{
document.write("I Love JavaScript");
}
info();
</script>
விளக்கம்:
Functions Arguments
<script>
function square(number)
{
document.write(number*number);
}
square(2);
</script>
விளக்கம்:
முதலில் square என்ற function declare செய்யப்படுகிறது. இந்த function-ல் number என்ற arguments கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் function-யை call செய்யும் போது அதனுடன் சேர்த்து argument கொடுக்க வேண்டும்.
square(2); இங்கு 2 என்பது argument ஆகும்.
Functions With Return Values
<html>
<head>
<script>
function data()
{
return"I Love India";
}
var x=data();
document.write(x);
</script>
</head>
<body>
</body>
</html>
விளக்கம்:
return keyword என்பது value-யை function declaration-ல் இருந்து function calling-க்கு அனுப்பும்.
function data() என்பது declaration ஆகும்.
இந்த function "I Love India" என்ற மதிப்பை return செய்கிறது.
இந்த மதிப்பானது function call செய்யப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறது.
var x = data();
data() என்பது function calling ஆகும்.இங்கு தான் return keyword அனுப்பிய மதிப்பு வரும்.அந்த மதிப்பானது variable x-ல் சேமிக்கப்படுகிறது.
arguments மற்றும் parameter-க்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால் function declaration-ல் கொடுப்பது parameters என்றும்,அந்த function-யை call பண்ணும்போது அதற்கு கொடுக்கப்படும் value arguments என்றும் சொல்லப்படுகிறது.
return keyword ஆனது function-ல் இருந்து ஒரு மதிப்பை return செய்கிறது.
No comments:
Post a Comment