Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Monday, March 30, 2020

JavaScript Array Methods In Tamil


concat():
ஒரு array-ல் இருக்கின்ற element-யை இன்னொரு array-ல் இருக்கின்ற element-ல் சேர்க்கும்.
Ex:
<script>
var first=new Array("james",22,44.4);
var second=new Array("john");
first=first.concat(second);
console.log(first);
</script>

Output


["james",22,44.4,"john"]

Explain:
first என்கின்ற array-இல் 3 elements இருக்கின்றது.
second என்கின்ற array-இல் 1(one) element இருக்கின்றது.
first=first.concat(second);
இந்த statement-ல் concat method-ன் உதவியால் second array-இல் இருக்கும் john என்ற element ஆனது first array-ல் இணைகின்றது.


join():
ஒவ்வொரு element-க்கும் separator-யை கொடுப்பது தான் இந்த join method-ன் வேலை ஆகும்.
Ex:
<script>

var data_1=new Array("james",22,44.4);
var data_2=data_1.join(";");
console.log(data_2);
</script>

Output


"james";22;44.4

Explain:
data_1 என்கின்ற array-இல் 3 elements இருக்கின்றது.
data_ 2=data_1.join(;);
இங்கு join என்கின்ற method-ன் உள்ளே semicolon(;) என்ற separator கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த separator ஆனது join method-ன் உதவியால் ஒவ்வொரு element-க்கும் இடையில் சேர்க்கப்படுகிறது.
கடைசியில் separator சேர்க்கப்பட்ட array-ஆனது data_ 2 என்ற variable-ல் சேர்க்கப்படுகிறது.


reverse():
Array-ல் நாம் கொடுக்கப்பட்ட elementயை அப்படியே reverse-ல் கொண்டு வரும்.

Ex:
<script>
var first=new Array("james","john","sam");
var second=first.reverse();
console.log(second);
</script>

Output


["sam","john","james"]

Explain:
first என்ற array-இல் 3 elements இருக்கின்றது.
reverse() என்கிற method-யை பயன்படுத்துவதன் உதவியால் இந்த element-கள் reverse order-இல் காண்பிக்கப்படுகிறது.


sort():
Ascending order(or)descending order-ல் array-யை வரிசைப்படுத்தி கொண்டு வரும்.
Ex:
<script>
var first=new Array("james","john","arjun","sam");
var second=first.sort();
console.log(second);
</script>

Output


["arjun", "james", "john", "sam"]

Explain:
first என்ற array-ல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து element-களும் இந்த sort() method-யை பயன்படுத்தி alphabetical order அல்லது ascending order-ன் படி வரிசைப்படுத்தி காட்ட முடியும்.


pop():
Array-ல் கடைசியாக இருக்கின்ற element-யை remove பண்ணி விடும்.
Ex:
<script>
var first=new Array("james","arjun","john");
first.pop();
console.log(first);
</script>

Output


["james","arjun"]

Explain:
first என்ற array-ல் jamesh,arjun,john என்ற 3 elements இருக்கின்றது.
first.pop();
pop() method-ன் மூலம் first என்கின்ற array-ல் கடைசியாக இருக்கும் john என்ற element ஆனது remove செய்யப்படுகிறது.


push():
Array-இல் ஒரு புதிய element-யை கடைசியாக சேர்க்கும்.
Ex:
<script>
var first=new Array("james","john","arjun");
first.push("first push");
console.log(first);
</script>

Output


["james","john","arjun","first push"]

Explain:
first என்ற array-ல் jamesh,john,arjun என்ற 3 elements இருக்கின்றது.
first.push("first push");
இங்கு first என்கிற array-இல் first push என்ற மதிப்பை கடைசி element-ஆக சேர்க்கப்படுகிறது.இது தான் push method-ன் வேலை ஆகும்.


shift():
Array-ல் முதலில் இருக்கின்ற element-யை remove பண்ணி விடும்.
Ex:
<script>
var first=new Array("apple","hp","dell");

first.shift();
console.log(first);

</script>

Output


["hp", "dell"]
Explain:
first என்ற array-ல் apple,hp,dell என்ற 3 elements இருக்கின்றது.

first.shift();
shift() என்ற method ஆனது first என்கின்ற array-ல் இருக்கின்ற முதல் element-ஆன apple-யை remove செய்கின்றது.


unshift():
Array-இல் ஒரு புதிய element-யை முதலில் சேர்க்க வேண்டுமென்றால் unshift method பயன்படுகிறது.
Ex:
<script>
var first=new Array("james","arjun","john");
first.unshift("mani");
console.log(first);

</script>

Output

["mani", "james", "arjun", "john"]
Explain:
unshift() method-ல் உள்ளே கொடுக்கப்பட்டுள்ள mani என்ற மதிப்பானது first என்ற array-யின் முதல் element-ஆக அமர்கின்றது.


slice():
ஒரு Array-இல் இருக்கின்ற element-யை இன்னொரு array-இல் copy செய்து போட பயன்படுகிறது.இதில் இரண்டு arguments இருக்கிறது.
Ex:
<script>
var first=new Array("apple","hp","dell","acer","lenovo");
var second=first.slice(0,2);
console.log(second);

</script>

Output

["apple", "hp"]
Explain:
first என்ற array-ல் apple,hp,dell,acer,lenovo என்ற elements இருக்கின்றது.


Array Locaitons:
first[0]--> apple
first[1]--> hp
first[2]--> dell
first[3]--> acer
first[4]--> lenovo

slice() method-ல் 0,2 என்ற மதிப்பு கொடுக்கப்படுகிறது.
இவற்றில் apple மற்றும் hp என்கின்ற மதிப்பு மட்டும் தான் தெரியும்.dell என்கின்ற மதிப்பு தெரியாது.

இது தான் slice() method-ன் வேலை ஆகும்.


splice():
ஒரு element-யை remove பண்ணிட்டு புது element-யை replace பண்ணும்.
Ex:
<script>
var first=new Array("apple","hp","dell","acer","lenovo");

var second=first.splice(1,3,"Asus");
console.log(first);
</script>

Output

["apple", "Asus", "lenovo"]
Explain:
first என்ற array-ல் apple,hp,dell,acer,lenovo என்ற elements இருக்கின்றது.

splice() method-ல் 1,3,"Asus" என்ற மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
[0]--hp;
[1]--dell;
[2]--acer;

இந்த மூன்று elements-யை remove செய்து விட்டு அதற்கு பதிலாக "Asus" என்ற மதிப்பு element ஆக வரும்.

1 comment: