Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Sunday, March 29, 2020

Javascript Functions Explain In Tamil


Function Example: 1



<script>
function display() // Function Declarations
{
console.log("I Love India"); // statement
}
display(); // Function Calling
</script>

Output
I Love India


முதலில் function declaration செய்யப்படுகிறது.
declare செய்யப்பட function block உள்ளே console.log("I Love India"); என்ற statement கொடுக்கப்பட்டுள்ளது.
display(); இங்கு function calling நடைப்பெறுகிறது.
function call செய்யப்படும்போது function-க்கு உள்ளே இருக்கும் statement execute ஆகிறது.

Function Example 2

<script>
function sum(x,y) // Function Declarations
{
return x+y; // statement
}
console.log(sum(2,3)); // Function Calling
</script>

Output
5

விளக்கம்(Explain):


முதலில் function declare செய்யப்படுகிறது.அதனுடன் சேர்த்து x,y என்ற இரண்டு parameter கொடுக்கப்படுகிறது.

block of function-ல் return x+y; என்ற statement எழுதப்பட்டுள்ளது.

கடைசியாக function calling நடைபெறுகிறது.அதனுடன் சேர்த்து 2 மற்றும் 3 என்ற argument கொடுக்கப்படுகிறது.

2 என்ற argument x என்ற parameter-ல் சேமிக்கப்படுகிறது.

3 என்ற argument y என்ற parameter-ல் சேமிக்கப்படுகிறது.

இப்பொழுது x என்ற parameter-ல் 2 என்ற மதிப்பும்,y என்ற parameter-ல் 3 என்ற மதிப்பும் சேமிக்கப்பட்டுள்ளது.

function உள்ளே செல்லும்போது return x+y என்ற statement ஆனது x-ல் இருக்கும் 2 மற்றும் y-ல் இருக்கும் 3 ஆகிய இரண்டு மதிப்புகளையும் கூட்டி 5 என்ற மதிப்பை return செய்கிறது.

Function Example 3

<script>
function show() // Function Declarations
{
console.log("javscript"); // statement
}
console.log(show()); // Function Calling
</script>

Output
javascript
undefined

விளக்கம்(Explain):


இங்கு ஏன் undefined என்று வருகிறது.காரணம்,நாம் இந்த function-இல் return என்ற keyword-யை பயன்படுத்தி எந்தவொரு மதிப்பையும் return செய்யவில்லை.
ஆனால்,Javascript function ஆனது default-ஆக undefined என்ற மதிப்பை return செய்கிறது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், Javascript-இல் எந்தவொரு function-யை எடுத்து கொண்டாலும் அது ஒரு மதிப்பை return செய்யும்.நீங்கள் எந்தவொரு return மதிப்பு கொடுக்கவில்லையென்றால் கூட javascript தானாகவே ஒரு மதிப்பை return செய்யும்.அந்த மதிப்பு undefined ஆகும்.

Function Example 4

<script>
function data(...value)
{
return value;

}
console.log(data(3,9,7,4,8));
</script>

Output
[3,9,7,4,8]

விளக்கம்(Explain):

...value என்பது rest operator ஆகும்.
இங்கு நாம் rest operator-யை பயன்படுத்தப்படும்போது function-இல் கொடுக்கப்படும் அனைத்து arguments-யையும் அது ஒரு array-வாக எடுத்துக் கொள்ளும்.

Function Example 4(ii)

<script>
function data(x,y,...value)
{
return value;
}
console.log(data(3,9,7,4,8));
</script>

Output
[7,4,8]

விளக்கம்(Explain):

இங்கு x என்பது முதலில் இருக்கும் 3 என்ற மதிப்பையும்,y என்பது இரண்டாவதாக இருக்கும் 9 என்ற மதிப்பையும் எடுத்துக் கொள்ளும்.

...value என்பது மற்ற மதிப்புகளை ஒரு array ஆக எடுத்துக் கொள்ளும்.

Function Example 5

<script>
function data(a,b)
{
return function(x,y)
{
return x+y
}
}
console.log(data(5,10)(15,7));
</script>

Output
22

இங்கு (5,10) என்ற argument (a,b) என்ற parameter-யை குறிக்கின்றது.

இங்கு (15,7) என்ற argument (x,y) என்ற parameter-யை குறிக்கின்றது.

return x+y; இங்கு x-இல் இருக்கும் 15 என்ற மதிப்பையும்,y-இல் இருக்கும் 7 என்ற மதிப்பையும் கூட்டி 22 என்ற மதிப்பை output-ஆக தருகிறது.

Function Example 6

<script>
function Add(a,b)
{
var a=10;
return function(x,y)
{
return x+y+a+b;
}
}
console.log(Add(3,10)(4,5));
</script>

Output
29

இங்கு (3,10) என்ற argument (a,b) என்ற parameter-யை குறிக்கின்றது.
இங்கு (4,5) என்ற argument (x,y) என்ற parameter-யை குறிக்கின்றது.

ஆனால்,a=3 என்ற மதிப்பை எடுக்காமல் a=10 என்ற மதிப்பை எடுத்துக் கொள்கிறது.

இங்கு,a=10-க்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.காரணம்,function-ன் scope ஆகும்.function-ன் scope உள்ளே கொடுக்கப்படும் value-க்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment