CSS என்பதனின் விரிவாக்கம் Cascading Style Sheet ஆகும்.
CSS ஆனது HTML element-க்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கின்றது.
CSS-யை பயன்படுத்துவதால் நிறைய வேலைகளானது குறைக்கப்படுகிறது.
CSS ஏன் பயன்படுத்துகிறோம்?
நம்முடைய web page-க்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதற்காக நாம் css-யை பயன்படுத்துகிறோம்.நமக்கு பிடித்த மாதிரி web page-ன் உடைய layout-யை மாற்ற முடியும்.
CSS-யை பயன்படுத்தி different device மற்றும் வெவ்வேறு screen size-க்கு ஏற்றவாறு நம்மால் web page-யை உருவாக்க முடியும்.
CSS Syntax
selector {propertyName:Value;}
EX:
p {color:green;}
CSS-ல் இரண்டு முக்கியமான பகுதி இருக்கிறது.
1.)selector
2.)declaration
selector:
நாம் எந்த html element-க்கு style-யை கொடுக்க விரும்புகிறோமோ அந்த html element-யை தான் selector என்று அழைக்கின்றோம்.
Declaration:
Declaration block-ன் உள்ளே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Declaration-யை நம்மால் கொடுக்க முடியும். ஒவ்வொரு Declaration-ம் property name மற்றும் value-வை கொண்டிருக்கும். colon பயன்படுத்துவதற்கான காரணம் property name மற்றும் value-வை பிரித்துக் காட்ட பயன்படுத்துகின்றோம். ஒவ்வொரு declaration முடிந்த பிறகு கண்டிப்பாக semicolon கொடுக்க வேண்டும்.
property:
Html element-க்கு நாம் எந்த வகையான attributes-யை கொடுக்கிறோமோ அதைதான் property என்று அழைக்கின்றோம்.
Ex:
color.Fontsize border...etc.
value:
Value என்பது நாம் பயன்படுத்துகின்ற property-க்கு கொடுக்கப்படுகின்ற மதிப்பு ஆகும்.
Ex:
Color என்கிற property-க்கு blue என்கிற value கொடுக்கப்படுகிறது.
Font size என்கிற property-க்கு 25px என்கிற value கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment