Operator
கணிதம் தொடர்பான சில வேலைகளை செய்வதறகு operator பயன்படுகிறது.
Eg:
x=1,y=2;
X + Y
இங்கு x மற்றும் y-யை operand என்று அழைப்பார்கள்.
+ என்பதை operators என்று அழைப்பார்கள்.
அதாவது,+என்கிற operation ஆனது x மற்றும் y-ன் மீது செயல்படுகின்றது.x-ன் மதிப்பு 1, y-ன் மதிப்பு 2 என்றும் இருகின்றது என வைத்து கொள்வோம்.
+operator ஆனது இந்த இரண்டையும் கூட்டல் செய்து நமக்கு 3 என்று display செய்கிறது.
இவைகளை தான் operand மற்றும் operator என்று அழைக்கிறோம்.
Classification of operator:
1.Unary operator
2.Binary operator
3.Ternary operator
Unary operator:
ஒரே ஒரு operand-யை பயன்படுத்தி செயல்படுகின்ற operator-கள் unary operator ஆகும்.
Eg:
++(increment operator)
++a
--(decrement operator)
--a
Binary operator:
இரண்டு operand-யை பயன்படுத்தி செயல்படுகின்ற operator-கள் binary operator ஆகும்.
Eg:
+,-,%,…etc
a+b;
Ternary operator:
மூன்று operand-யை பயன்படுத்தி operator-கள் ternary operator ஆகும்.
இதற்கு conditional operator என்று மற்றோரு பெயரும் உண்டு.
(expression 1)?(expression 2):(expression 3);
Arithmetic Operator
கணிதம் தொடர்பான செயல்களை செயல்படுத்த பயன்படுத்தும் operator-களை arithmetic operator-கள் எனப்படும்.Addition:
கூட்டுதல் தொடர்பான வேலைகளை செய்ய பயன்படுகின்றது.
void main()
{
int x=10;
int y=5;
printf("X+Y=%d",x+y);
}
Subractor:
கழித்தல் தொடர்பான வேலைகளை செய்ய பயன்படுகின்றது.
void main()
{
int x=10;
int y=5;
printf("X-Y=%d",x-y);
}
Multiplication:
பெருக்கல் தொடர்பான வேலைகளை செய்ய பயன்படுகின்றது.
void main()
{
int x=10;
int y=5;
printf("X*Y=%d",x*y);
}
Division:
வகுத்தல் தொடர்பான வேலைகளை செய்ய பயன்படுகின்றது.
void main()
{
int x=10;
int y=5;
printf("X/Y=%d",x/y);
}
Modulus:
module operator-ன் வேலை என்னவென்றால் வகுத்தலின் போது கிடைக்கும் மீதி(remainder) value-யை நமக்கு கொடுக்கும்.
void main()
{
int x=10;
int y=5;
printf("Remainder value=%d",x%y);
}
Assignment Operator
ஒரு variable-ல் ஒரு மதிப்பை சேமித்து வைப்பதற்கு assignment operator பயன்படுகின்றது.வலது பக்கத்தில் இர்ருக்குகின்ற மதிப்பை எடுத்து எடுத்து இடது பக்கத்தில் இறக்கும் இருக்கும் variable-ல் சேமித்து வைக்கின்றது.
int main()
{
int x=10;
int y=x;
printf("x=%d\t y=%d",x,y);
}
o/p:
x=10 y=10
Compound assignment operator
+=முதலில் operator-க்கு வலப்பக்கத்தில் இருக்கும் x என்கிற operand-ன் ன் மதிப்பையும்,y என்கிற operand-ல் இருக்கும் மதிப்பையும் கூட்டல் செய்து அதில் கிடைக்கின்ற மதிப்பை operator-க்கு இடப்பக்கத்தில் இருக்கும் x என்கிற variable-ல் சேமிக்கின்றது.
int main()-=
{
int x=10;
int y=5;
x+=y;
printf("Value of (x+=y)=%d",x);
}
int main()/=
{
int x=10;
int y=5;
x-=y;
printf("Value of (x-=y)=%d",x);
}
int main()*=
{
int x=10;
int y=5;
x/=y;
printf("Value of (x/=y)=%d",x);
}
int main()%=
{
int x=10;
int y=5;
x*=y;
printf("Value of (x*=y)=%d",x);
}
முதலில் assignment operator-க்கு வலப்பக்கத்தில் இருக்கும் x என்கிற operand-ன் மதிப்பையும்,y என்கிற operand-ல் இருக்கும் மதிப்பையும் வகுத்தல் செய்து கிடைக்கின்ற மதிப்பை assignment operator-க்கு இடப்பக்கத்தில் இருக்கும் x என்கிற variable-ல் சேமிக்கப்படுகிறது.
இங்கு இரண்டு operation நடைபெறுகிறது.ஒன்று ,division operation மற்றோன்று assignment operation ஆகும்.முதலில்,division operation-தான் நடைபெறும்.
int main()
{
int x=10;
int y=5;
x%=y;
printf("Value of (x%=y)=%d",x);
}
Relational Operator
relational operator-யை பயன்படுத்தி இரண்டு variable-ன் மதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க முடியும். இது போன்று variable-களுக்கு இடையே ஒப்பிட்டு பார்க்கையில் நமக்கு மதிப்பு true என்று கிடைத்தால் மதிப்பு 1-யை return செய்யும், false என்று கிடைத்தால் மதிப்பு 0-யை return செய்யும்.Equal to(==):
வலப்பக்கம்(right side) மற்றும் இடப்பக்கம்(left side) கொடுக்க்கப்படும் operand-களின் மதிப்பு சமம் என்றால் 1 என return செய்யும். இல்லையென்றால் 0 என்ற மதிப்பை return செய்யும்.
int main()
{
int x=5,y=10;
printf("value of (a==b)=%d",a==b);
return 0;
}
output:
0
Not equal to(!=):
int main()
{
int x=5,y=10;
printf("value of (a!=b)=%d",a!=b);
return 0;
}
output:
1
Less than(<):
இடப்பக்கம் இருக்கு operand-ன் மதிப்பானது வலப்பக்கத்தில் இருக்கும் operand-ன் மதிப்பை விட சிறியதாக இருந்தால் 1 என்ற மதிப்பை return செய்யும்.இல்லையென்றால் 0 என்ற மதிப்பை return செய்யும்.
int main()
{
int x=5,y=10;
printf("value of (a return 0;
}
output:
1
Less than or equal to(<=):
இடப்பக்கம் இருக்கும் operand-ன் மதிப்பானது வலப்பக்கத்தில் இருக்கும் operand-ன் மதிப்பை விட சிறிதாகவோ (அல்லது) சமமாகவோ இருந்தால் 1 என்ற மதிப்பை return செய்யும். இல்லையென்றால் 0 என்ற மதிப்பை return செய்யும்.
int main()
{
int x=5,y=10;
printf("value of (a<=b)=%d",a<=b);
return 0;
}
output:
1
Greater than(>):
இடப்பக்கத்தில் இருக்கும் operand-ன் மதிப்பானது வலப்பக்கத்தில் இருக்கும் operand-ன் மதிப்பை விட பெரிதாக இருந்தால் 1 என்ற மதிப்பை return செய்யும்.இல்லையென்றால் 0 என்ற மதிப்பை return செய்யும்.
int main()Greater than or equal to(>=):
{
int x=5,y=10;
printf("value of (a>b)=%d",a>b);
return 0;
}
output:
0
int main()
{
int x=5,y=10;
printf("value of (a>=b)=%d",a>=b);
return 0;
}
output:
0
Logical Operator
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட relational expression-களை ஒப்பிட்டு பார்ப்பதற்கு logical operation பயன்படுகின்றது.logical OR(||)operator
logical AND(&&)operator
logical NOT(!)operator
Logical OR Operator:
ஏதேனும் ஒரு மதிப்பு 1 என இருந்தால் result-ல் 1 என்று வரும். கொடுக்கப்படும் இரண்டு மதிப்பு 0ஆக இருந்தால் result-ல் 0 என்று வரும்.
int main()Logical AND Operator:
{
int x=5,y=10,result;
result=((xprintf("Result=%d",result);
return 0;
}
output:
1
இரண்டு மதிப்பு 1 என இருந்தால் result-ல் 1 எனக் கொடுக்கப்படும்.இல்லையென்றால் result-ல் 0 எனக் கொடுக்கப்படும்.
int main()Logical NOT Operator:
{
int x=5,y=10,result;
result=((xprintf("Result=%d",result);
return 0;
}
output:
0
கொடுக்கப்படும் மதிப்பு 0-ஆக இருந்தால் 1-ஆக மாற்றும்.கொடுக்கப்படும் மதிப்பு 1-ஆக இருந்தால் அதனை 0-ஆக மாற்றும்.
int main()
{
int x=5,y=10,result;
result=!((xprintf("Result=%d",result);
return 0;
}
output:
1
Sizeof Operator
sizeof operator-யை பயனபடுத்தி ஒரு variable (or) data type-இன் அளவை நம்மால் கண்டுப்பிடிக்க முடியும்.int main()
{
char c;
printf("\n Size Of C=%d",sizeof(c));
printf("\n sizeof(3)=%d",sizeof(3));
return 0;
}
output:
1
4
Increment and Decrement Operator
Increment Operatorincrement operator-யை பயன்படுத்தும்போது நாம் கொடுத்த மதிப்புடன் சேர்த்து ஒன்று கூடுவது ஆகும்.
int main()Decrement Operator
{
int x=5;
printf("x=%d",x);
x++;
printf("x=%d",x);
return 0;
}
Output:
5
6
decrement operator-யை பயன்படுத்தும்போது நாம் கொடுத்த மதிப்புடன் சேர்த்து ஒன்று கழிப்பது ஆகும்.
int main()
{
int x=5;
printf("x=%d",x);
x--;
printf("x=%d",x);
return 0;
}
Output:
5
4
post increment
int x=5;விளக்கம்:
int y=x++;
step 1:
முதலில் x என்கிற integer variable-ன் மதிப்பானது memory-ல் சேமிக்கப்படுகிறது.
step 2:
int y=x++;
முதலில் x-ன் மதிப்பானது y-ல் சேமிக்கப்படுகிறது.அதாவது,x-ல் இருக்கின்ற 5 என்கிற மதிப்பானது y-ல் சேமிக்கப்படும்.இப்பொழுது y-ன் மதிப்பு 5 ஆகும். step 3:
y-ல் x-ன் உடைய மதிப்பு சேமிக்கப்பட்ட பிறகு தான்,x++(x+1) என்கிற operation நடைபெறுகிறது. அதாவது,x என்பது தன்னிடம் இருக்கின்ற மதிப்புடன் ஒன்றை(1) கூட்டுவதாகும்.இப்பொழுது,இருக்கின்ற 5 என்கிற மதிப்பானது 6 என்கிற மதிப்பாக மாற்றப்பட்டு memory-ல் சேமிக்கப்படுகிறது.
pre increment
int x=5;விளக்கம்:
int y=++x;
step 1:
முதலில் x என்கிற variable-ன் மதிப்பானது memory-ல் சேமிக்கப்படுகிறது.
step 2:
int y=++x;
இங்கு முதலில் x என்கிற மதிப்புடன் ஒன்று(1)என்ற மதிப்பானது கூட்டல் செய்யப்படுகிறது. அப்பொழுது,x-ல் இருக்குகின்ற 5 என்ற மதிப்பானது 6 என்கிற மதிப்பாக மற்றபடுகிறது.
step 3:
இப்பொழுது x-ல் இருக்கும் மதிப்பானது y-ல் சேமிக்கப்படுகிறது.அதாவது,x-ல் இருக்கின்ற 6 என்கிற மதிப்பானது y-ல் சேமிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment