Functions
ஒரு group of statements ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வது தான் function ஆகும்.function-யை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் modularity மற்றும் reusability ஆகும்.
modularity
நீங்கள் ஒரு பெரிய program-யை சிறு சிறு module-ஆக பிரித்து எழுதினால் உங்களால் அதனை எளிமையாக maintain பண்ண முடியும்.இந்த program-ல் error உள்ளது என்றால் அந்த error எந்த module-ல் இருகின்றது என்பதை கண்டுபிடிக்க அதனை சரி செய்வது மிகவும் எளிமையாக இருக்கும்.இதனால் தான் modularity ஆனது program-ன் ஒரு முக்கிய அங்கமாக இருகின்றது.
code reusability
ஒரு program எழுதும்போது அதில் ஒரு logic ஆனது மூன்று இடத்தில அந்த logic-யை type பண்ணுவதால் உங்களுடைய நேரமும் வீனாகும்,மற்றும் உங்களுடைய program-ன் line-களும் அதிகமாகும்.அதனால்,இதனை நீங்கள் ஒரு function-ஆன ஒரு முறை எழுதிவிட்டால் உங்களுக்கு தேவைப்படும் இடத்தில் இந்த function-யை கொடுத்தால் மட்டும் போதும்.
இது தான் code reusability-ன் முக்கியமான வேலை ஆகும்.
இதன் மூலம் நாம் function-யை பயன்படுத்தும் போதும் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.
Function Declaration:
syntaxReturn_datatype-> function ஆனது ஒரு வேலையை முடித்துவிட்டு அது ஒரு மதிப்பை return செய்கின்றது.
return_datatype function_name(parameter);
Function_name-> இந்த பெயரானது ஒரு அர்த்தமுள்ள பெயராக கொடுக்க வேண்டும்.
Ex:
ஒரு function ஆனது இரண்டு மதிப்பை எடுத்து பெருக்கல் செய்கிறது என்றால் அதற்கு multiplication என்று கொடுக்கலாம்.இதனால் மற்றவர்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.
Parameters->function-யை call செய்யும்போது அதற்கு கொடுக்கப்படும் மதிப்பானது இந்த parameters மூலம் பெறப்படும்.
EX:
multiplication()என்ற function-க்கு இரண்டு மதிப்பு தேவைப்படுகிறது என்றால் அதனை multiplication(int x ,int y )என்று கொடுக்கலாம்.இந்த parameter-யை parenthes உள்ளே கொடுக்க வேண்டும்.
function without parameter & return type:
syntax:ஒரு function எந்தவொரு parameter வாங்காமலும்,எந்தவொரு return type கொடுக்காலும் நம்மால் declare பண்ண முடியும்.
return_datatype function_name();
Ex:
void multiplication();
void என்பது எந்தவொரு மதிப்பையும் return செய்யாது.
function definition
Function definition உள்ளே தான் நாம் program-யை எழுதுவோம்.
Ex
int multiplication(int x,int y)
{
int result;
result=x*y;
return result;
}
No comments:
Post a Comment