Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Thursday, May 14, 2020

how to for loop using javascript in tamil



ஒரு block of statement குறிப்பிட்ட தடவை மீண்டும் மீண்டும் செயல்படுத்த for loop பயன்படுகின்றது.

Syntax:

For(initialize variable;condition;increment/decrement)

{

Body of loop;

}

initialize variable தொடக்க மதிப்பு ஒன்றை கொடுக்க வேண்டும்.

increment/decrement என்பது initialize variable-க்கு கொடுக்கப்படும் மதிப்பை உயர்த்தவோ (அ )குறைக்கவோ பயன்படுகின்றது .

for loop execute ஆகும் போது முதலில் initialize variable-ன் மதிப்பு கொடுக்கப்படுகிறது.
அதன் பிறகு condition-ஆனது check செய்யப்படுகின்றது.
condition-ஆனது true ஆகும் போது body of loop செயல்படுத்தப்பட்டு பின்னர் increment/decrementபகுதிக்கு செல்கிறது.
இங்கு initialize variable-ன் மதிப்பானது increment/decrementசெயல்படுகின்றது.

condition true-ஆக இருக்கும் வரை body of loop செயல்படுகின்றது.
false ஆகும் போது loop -யை விட்டு வெளியே வருகின்றது.


for(var i=0;i<=2;i++)

{

Console.log(“I LOVE JS”);

}

Output:

I LOVE JS

I LOVE JS

I LOVE JS

Explain:

இங்கு var i; என்பது initialize variable ஆகும்.
இதற்கு தொடக்க மதிப்பான 0 என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக,condition check செய்யப்படுகின்றது.
i-ன் மதிப்பு 0 என்பதால் (i<=2 ie:(0<=2)) condition true ஆகும்.
condition true என்பதால் "I love js"என்பது display ஆகும்.

display செய்த பிறகு i++ என்கிற பகுதிக்கு சென்று i-ன் மதிப்புடன் ஒன்றை கூட்டும்.
இப்பொழுது i-ன் மதிப்பானது 0-லிருந்து 1-க்கு உயர்த்தப்படுகிறது.
அதன் பிறகு மறுபடியும் condition-க்கு செல்கிறது.
condition true-ஆக இருந்தால் "i love js"display ஆகும்.

இதே process-ஆனது condition true-ஆகும் வரை திரும்ப நடைபெறுகின்றது.
condition false ஆகும் போது loop-க்கு வெளியே இருக்கும் statement display செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment