Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Saturday, April 25, 2020

Comment Using C Program In Tamil


Comment:

comment என்பது program-யை மிக எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.


comment-யை நாம் எதற்கு பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
நான் ஒரு program எழுதுகிறேன்.அந்த program-யை நான் என்னுடைய நண்பனுக்கு கொடுக்கிறேன்.என் நண்பன் மேலும் சில சிறப்பம்சங்கள் சேர்க்க விரும்புகிறான்.ஆனால் என்னுடைய program-யை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை காரணம் நான் எழுதிய program-யை பற்றிய எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கின்றது.அது தான் comments ஆகும்.இந்த comments பயன்படுத்தி நாம் எந்த காரணத்திற்க்காக இந்த program எழுதினோம்,இது எப்படி வேலை செய்யும் என்பதை comment-ல் சொல்ல முடியும்.


இரண்டு வகையான comments உள்ளது.
1.Single line comment
2.Multi line comment


Single line comment:
Double forward slash(//) வைத்து தொடங்கப்பட்டிருக்கும்.Double forward slash-க்கு பிறகு நாம் கொடுக்கின்ற எந்த sentence-யையும் அது program-ஆக எடுத்து கொள்ளாது.

இந்த program-யை Run செய்தால் compiler இந்த sentence-யை எடுத்து கொள்ளாது.

#include<stdio.h>
int main()
{
printf(“Hello World”); //Display the hello world.
return 0;
}



Multi Line Comment:
இது Forward Slash(/*)-ல் ஆரம்பிக்கப்பட்டு star Forward(*/)-ல் முடிக்கப்படுகிறது.
Ex:
இந்த program-யை யார் எழுதினார் எந்த language-ல் எழுதினார் எதற்காக இந்த program-யை எழுதினார் என்பதை multiline comment-ன் மூலம் கொடுப்போம்.இத்தனியா compiler கண்டு கொள்ளாது.ignore செய்து விடும்.
இந்த மாதிரி comment பயன்படுத்தும்போது வேறொருவரால் என்னுடைய program-யை மிக எளிமையாக புரிந்துகொள்ளவும்,வாசிக்கவும் முடியும்.

/* 

Program Name : Print the Hello World
Using Language: C
Developer Name: GladyCoder

*/

#include<stdio.h>
int main()
{
printf(“Hello World”);
return 0;
}



1 comment: