Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Sunday, April 26, 2020

compiler Process In C Program பற்றி பார்ப்போம்.



compiler என்பது source code-யை assembly code-ஆக மாற்றுவது ஆகும்.
source code என்பது நாம் எழுதும் high level language ஆகும்.high level language என்பது C,C++,JAVA ஆகும்.
Assembly code என்பது machine-ஆல் எளிமையாக புரிந்து கொள்ள கூடிய low level instruction-யை தான் assembly code என்கிறோம்.
எனவே,நாம் எழுதும் high level language -யை machine புரிந்து கொள்கின்ற low level instruction-ஆக மாற்றுவது தான் compiler-ன் வேலை ஆகும்.
மேலும்,source code-ல் ஏதேனும் syntax error இருந்தால் அதனை நமக்கு தெரியப்படுத்துவது compiler-ன் வேலை ஆகும்.

இப்பொழுது C program compilation பற்றி ஒவ்வொரு step-ஆக பாப்போம் :


முதலில் நாம் ஒரு C Program-யை எழுதி அதனை save பண்ண வேண்டும்.இந்த program-ன் பெயர் hello என்று கொடுக்க விரும்புகிறேன்.அப்பொழுது hello.c என்று கொடுத்து save செய்ய வேண்டும்.

இங்கு .c என்பது file extension ஆகும்.


நாம் இப்பொழுது program-யை compile செய்கின்றோம்.
நாம் எழுதிய program-யில் எந்தவொரு error இல்லையென்றால் compiler-ஆனது நாம் எழுதிய program-யை object program-ஆக மாற்றிவிடும்.

இதன் பிறகு முக்கியமான வேலை நடைபெறுகின்றன. அது என்னவென்றால் linking process ஆகும். நாம் C program தொடக்கத்தில் header file கொடுத்து இருப்போம்.
இந்த header file-ன் நிறைய pre-defined function-யை உள்ளே வைத்திருக்கும்.
இந்த Linking process உதவியால் header file-ல் இருக்கும் pre-defined function ஆனது நம்முடைய C program உடன் இணைக்கப்படும் . இவை சரியாக நடந்தால் object program ஆனது executable program-ஆக convert ஆகும்.

hello.exe

இந்த exe file-தான் Run செய்யப்பட்டு நமக்கு output தெரிகின்றன.

No comments:

Post a Comment