Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Wednesday, April 8, 2020

Angular என்றால் என்ன?


Angular-யை அறிமுகப்படுத்தியது google ஆகும்.
angular-ல் இரண்டு வகை உண்டு.
1.Angularjs
2.Angular 2,3,4,5..etc. இப்பொழுது latest-ஆக Angular 9 பயன்ப்படுத்தப்படுகிறது.


Angular ஒரு client side programming ஆகும்.
angular-யை பயன்படுத்தி உருவாக்கப்படும் application-யை நீங்கள் desktop,mobile ,tablet போன்றவற்றில் பயன்படுத்த முடியும்.
அதே போல் linux,windows,apple போன்ற வெவ்வேறு plateform-ல் பயன்படுத்த முடியும்.
Angular படிப்பதற்கு முன்பாக உங்களுக்கு html,css,javascript(or)Typescript தெரிந்து இருக்க வேண்டும்.

Angular பயன்படுத்த நமக்கு என்னவெல்லாம் தேவை?

Node -> இது server-க்கு தேவையான வேலைகள் அனைத்தையும் பார்த்து கொள்ளும்.

NPM -> Third Party Library பயன்படுத்த உதவுகிறது.
ex:
என்னுடைய application-ல் நான் google map பயன்படுத்த விரும்புகிறேன்.இந்த google map-யை உருவாக்கியது google company ஆகும்.google உருவாக்கிய இந்த library-யை என்னுடைய application-க்கு கொண்டுவர பயன்படுவது தான் இந்த NPM வேலை ஆகும்.

Visual Studio Code -> இது ஒரு developer Editor ஆகும்.
ex:
notepad++,Netbeans,...etc.

Angular CLI -> இது Angular Client ஆகும்.

Browser-ல் application run ஆக வேண்டுமென்றால் Html,css,Javscript இந்த மூன்றும் இருந்தால் run ஆகும்.ஆனால்,Angular-ல் இருப்பது Typescript ஆகும்.அதனால்,typescript-யை Javascript ஆக மாற்றுவது இந்த Angular CLI வேலை ஆகும்.
நீங்கள் Node install செய்தால் அதனுடன் சேர்ந்து NPM install ஆகிவிடும்.

node -v -> இங்கு v என்பது version ஆகும்.நீங்கள் install செய்து இருக்கும் node-ன் version என்னவென்று இந்த command-ன் மூலம் பார்க்க முடியும்.

npm -v -> இந்த command-ன் உதவியால் நீங்கள் install செய்து இருக்கும் npm version என்னவென்று பார்க்க முடியும்.

எப்படி Angular Project உருவாக்குவது?


நீங்கள் புதிதாக ஒரு angular project உருவாக்க விரும்பினால் அதற்கு இந்த command-யை கொடுக்க வேண்டும்.
ng new FirstApp

இந்த command-யை கொடுத்து Enter Button-யை அழுத்தும் போது உங்களுக்கு கீழே சில கேள்விகள் கேட்கப்படும்.

முதல் கேள்விக்கு,
Angular Routing என்பது நீங்கள் ஒரு link-யை click செய்யும்பொழுது அதற்க்கு உரிய பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்வது தான் இந்த Routing வேலை ஆகும்.
உங்களுக்கு Routing தேவையென்றால் Y என்று கொடுக்கவும் இல்லையென்றால் N என்று கொடுக்கவும்.

இரண்டாம் கேள்விக்கு,
இவைகளில் நீங்கள் css பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் css கொடுக்க வேண்டும்.

இந்த இரண்டு கேள்விக்கும் பதில் அளித்தவுடன் உங்களுடைய project உருவாக்கப்படும்.
project உருவாக்கிய பிறகு,அதனை Run செய்து பார்க்க ng serve என்ற command-யை கொடுக்க வேண்டும்.
project run செய்யப்பட்டு கீழே இந்த link (http://localhost:4200/** ) ஆனது கொடுக்கப்படும். இந்த link-யை கிளிக் செய்யும் பொழுது உங்களுடைய browser-ல் நீங்கள் உருவாக்கிய Angular Application display ஆகும்.
முதன் முதலில் default-ஆக உருவாக்கியா Angular Application Output இப்படி தான் இருக்கும்.

இப்படி தான் Angular-யை நமது கணினியில் நிறுவவும்,பயன்படுத்தவும் முடியும்.

No comments:

Post a Comment