Learn Computer Programming In Tamil

Breaking

[தமிழில்] HTML & CSS Online Course

[தமிழில்] HTML & CSS Online Course
[தமிழில்] HTML & CSS Online Course

Saturday, September 19, 2020

[Tamil] CSS Colors In Tamil


ஒரு webpage-ல் colors ஆனது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
1) Background color
2) Foreground color

மேலே உள்ள படத்தினை பாருங்கள். அதில் தெரிகின்ற webpage-ன் background color ஆனது white color மற்றும் Foreground color என்பது text-ன் color குறிக்கின்றது.

Background color-யை மாற்றுவது எப்படி?
Webpage-ன் உடைய Background color-யை white-ல் இருந்து green-ஆக மாற்ற விரும்புகிறேன்.அப்பொழுது முதலில் இந்த background color-ஆனது எந்த element-ல் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இது body element-ல் உள்ளது.

   <html>
<head>
<title>Background Color Change</title>
<style>
body{
background-color:green;
}
</style>
</head>
<body>
<p>I Love CSS.</p>
</body>
</html>
விளக்கம்:-
body -> இது html-ன் body element-யை குறிக்கிறது.

Body tag நிறைய property-யை கொண்டுள்ளது. அதில் ஒரு property தான் background color ஆகும். இந்த background color property-யை பயன்படுத்தி நம்மால் body tag-ன் background color-யை மாற்ற முடியும்.


green -> green என்பது property-ன் உடைய value ஆகும். Body tag-ன் உடைய background color ஆனது Green-ஆக மாறுகிறது.



Foreground color-யை மாற்றுவது எப்படி?

Foreground color என்பது text-ன் உடைய color-யை குறிக்கின்றது. இங்கு text-ன் உடைய default color black ஆகும்.இதனை நாம் white-ஆக மாற்ற விரும்புகிறேன்.

	 <html>
<head>
<title>Foreground Color Change</title>
<style>
body{
color:green;
}
h1{
color:white;
}
</style>
</head>
<body>
<h1>I Love CSS.</h1>
</body>
</html>
h1 -> இது html-ன் h1 tag-யை குறிக்கின்றது.

Color:white;

Color என்பது h1 tag-ன் உடைய ஒரு paragraphஆகும்.white என்பது property-ன் உடைய value ஆகும். அதாவது hr tag-ன் உள்ளே இருக்கின்ற text color-யை black color-ல் இருந்து white color ஆக மாற்றுகிறது.


Background color:-

Background color என்பது element-க்கு பின்புறத்தில் இருக்கின்ற color-யை குறிக்கின்றது. இங்கு h1 tag-ன் உடைய background color ஆனது white ஆகும்.foreground color ஆனது black ஆகும்.


Element Background color-யை மாற்றுவது எப்படி?
h1 tag-ன் உடைய background color-யை white-ல் இருந்து green-ஆக மாற்ற வேண்டும்.
<html>
<head>
<title>Element Background Color Change</title>
<style>
h1{
background-color:green;
}
</style>
</head>
<body>
<h1>I Love CSS.</h1>
</body>
</html>

2 comments: