ஒரு component-ல் இருந்து மறறொரு component-க்கு அழைத்து செல்வதுதான் router-இன் வேலை ஆகும்.
STEP 1:
இங்கு என்னிடம் HomeComponent,AboutComponent,ContactComponent உள்ளது.இங்கு இருக்கும் ஒவ்வொரு component-க்கும் ஒவ்வொரு path கொடுக்க வேண்டும்.முதலில் நமக்கு தேவையான path-யை உருவாக்க வேண்டும்.
இங்கு path:’home’ என்பதை கிளிக் செய்தால் HomeComponent-க்கு போக வேண்டும்.
//இதனை path list என்று அழைப்பார்கள்.
const routes:Routes =[
{path:'home',component:HomeComponent},
{path:'about',component:AboutComponent},
{path:'contact',component:ContactComponent},
{path:'',component:HomeComponent}

Path:’about’ என்பதை கிளிக் செய்தால் AboutComponent-க்கு போக வேண்டும்.path:’contact’ என்பதை கிளிக் செய்தால் Contact Component-க்கு போக வேண்டும்.
நான் கடைசியாக இருக்கும் path-ல் எந்தவொரு மதிப்பும் கொடுக்காமல் empty-ஆக(path:’’)கொடுத்து உள்ளேன்.ஆனால்,இந்த path ஆனது HomeComponent-க்கு போக வேண்டும் என்று கொடுத்து இருப்பேன்.
அதற்கு காரணம், என்னுடைய application-யை open செய்யும்பொழுது அது default-ஆக HomeComponent-இல் தான் இருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது. இங்கு path அனைத்தும் array-இல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த path list அனைத்தையும் நான் routes என்கிற variable-லில் சேமிக்கப்பட்டுள்ளது.
STEP 2:
இப்பொழுது நான் உருவாக்கிய இந்த routes-யை Router Module-லில் assign பண்ண வேண்டும்.routes என்பதில் நாம் உருவாக்கிய path list இருக்கின்றது.
RouterModule.forRoot(routes) இந்த statement-இன் வேலை என்னவென்றால் நாம் உருவாக்கிய path list-யை RouterModule-லில் assign பண்ணுவது ஆகும்.
const routing=RouterModule.forRoot(routes);
இந்த RouterModule-யை routing என்ற variable-லில் சேமிக்கிறோம்.
STEP 3:
இப்பொழுது app.module.ts-இல் import செய்ய வேண்டும்.
import { RouterModule, Routes } from '@angular/router';

imports: [
BrowserModule,
AppRoutingModule,
FormsModule ,
routing //routing என்பது RouterModule-யை குறிக்கின்றது.

STEP 4:
நான் app.component.html-லில் தான் பயன்படுத்த போகிறேன்.anchor tag-இல் href என்ற attributes-யை பயன்படுத்த கூடாது.அதற்கு பதிலாக roterLink-யை பயன்படுத்த வேண்டும்.
Home
About Us
Contact
இங்கு "/home"என்பது path ஆகும். இந்த "/home" என்பது app.module.ts-இல் இருக்கும் {path:'home',component:HomeComponent} இந்த path-யை குறிக்கின்றது.
இதேபோல் தான் "/about","/contact" என்பது அதனுடைய path-யை குறிக்கின்றது.
STEP 5:
இப்பொழுது ஏதேனும் ஒரு link-யை click செய்தால் அதனுடைய component இந்த router-outlet-இல் தான் load ஆகும்.<router-outlet></router-outlet><router-outlet>என்பது ஒரு directory ஆகும்.இதனுடைய வேலை என்னவென்றால்,user ஒரு URL-யை click செய்து உள் நுழையும்போது அந்த url-இல் இருக்கும் component-யை எடுத்து இதன் உள்ளே வைத்துக் கொள்ளும்.
ex:
user about-யை click செய்து உள்நுழையும்போது அந்த url-இல் இருக்கும் component-யை எடுத்து இதன் உள்ளே வைத்துக் கொள்ளும்.
இப்பொழுது user Contact link-யை click செய்யும்பொழுது ஏற்கனவே இதனுள் இருக்கும் about component-யை எடுத்து வெளியே வைத்து விட்டு இப்பொழுது click செய்த contact url-ல் இருக்கும் contact component-யை எடுத்து உள்ளே வைத்து கொள்ளும்.இப்படி dynamic-ஆக வேலை செய்யும்.
Sample Code:
app.component.html:
Home
About Us
Contact
<router-outlet></router-outlet>
app.Module.ts:
import { BrowserModule } from '@angular/platform-browser';
import { NgModule } from '@angular/core';
import {FormsModule} from '@angular/forms';
import { AppRoutingModule } from './app-routing.module';
import { AppComponent } from './app.component';
import { AddFivePipe } from './add-five.pipe';
import{AdditionService} from './addition.service';
import { FirstComponent } from './first/first.component';
import { HomeComponent } from './home/home.component';
import { AboutComponent } from './about/about.component';
import { ContactComponent } from './contact/contact.component';
import { Route } from '@angular/compiler/src/core';
import { RouterModule, Routes } from '@angular/router';
const routes:Routes =[
{path:'home',component:HomeComponent},
{path:'about',component:AboutComponent},
{path:'contact',component:ContactComponent},
{path:'',component:HomeComponent}

const routing=RouterModule.forRoot(routes);
@NgModule({
declarations: [
AppComponent,
AddFivePipe,
FirstComponent,
HomeComponent,
AboutComponent,
ContactComponent

imports: [
BrowserModule,
AppRoutingModule,
FormsModule ,
routing

providers: [AdditionService],
bootstrap: [AppComponent]

export class AppModule { }
No comments:
Post a Comment