HTML LIST TAGS:
தகவல்களை வரிசை படுத்தி காண்பிக்க உதவுகிறது.
ex:
நீங்கள் கடையில் பொருட்கள் வாங்க செல்லும் போது,நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருந்தால் ஒரு list ஒன்று கொண்டு போவீர்கள்.அதே போல் நாம் html-இல் எப்படி list தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
மூன்று வகையான list இருக்கிறது.
- ordered list
- unordered list
- description list
Ordered list-இல் கொடுக்கப்படுகின்ற அனைத்து தகவல்களும் இயல்பாகவே எண்களுடன் குறிக்கப்படுகின்றன.
<ol> tag ஆனது Ordered list-யை குறிக்கின்றது.Ordered list இந்த <ol> tag மூலம் தொடங்கப்படுகிறது.அதன் உள்ளே கொடுக்கப்படும் item ஆனது <li> tag மூலம் தொடங்கப்படுகிறது.
HTML ORDERED LIST
<html>
<head>
</head>
<body>
<h1>Ordered List</h1>
<ol>
<li>ஆப்பிள்</li>
<li>ஆரஞ்சு </li>
<li>மாம்பழம் </li>
</ol>
</body>
</html>
OUTPUT
Unordered list:
Unordered list-இல் கொடுக்கப்படுகின்ற அனைத்து தகவல்களும் புல்லட் பாயிண்ட் மூலம் குறிக்கப்படுகின்றன.
<ul> tag ஆனது Unordered list-யை குறிக்கின்றது.Unordered list இந்த <ul> tag மூலம் தொடங்கப்படுகிறது.அதன் உள்ளே கொடுக்கப்படும் item ஆனது <li> tag மூலம் தொடங்கப்படுகிறது.
HTML UNORDERED LIST
<html>
<head>
</head>
<body>
<h1>UnOrdered List</h1>
<ul>
<li>ஆப்பிள்</li>
<li>ஆரஞ்சு </li>
<li>மாம்பழம் </li>
</ul>
</body>
</html>
OUTPUT
Description List:
இது மூன்று tag-களை உள்ளடக்கியது.
- <dl>tag:பட்டியலின் (list) தொடக்கத்தை குறிக்கிறது.
- <dt>tag:ஒரு சொல்லை குறிக்கிறது.
- <dd>tag:இது விளக்கத்தை (description) குறிக்கிறது.
HTML DESCRIPTION LIST
<html>
<head>
</head>
<body>
<h1>Descriptions List</h1>
<dl>
<dt>ஆப்பிள் </dt>
<dd>எனக்கு ஆப்பிள் பிடிக்கும்.</dd>
<dt>ஆரஞ்சு </dt>
<dd>எனக்கு ஆரஞ்சு பிடிக்கும்.</dd>
<dt>சாக்லேட் </dt>
<dd>எனக்கு சாக்லேட் பிடிக்கும்.</dd>
</dl>
</body>
</html>



No comments:
Post a Comment